78 ஆவது ஆண்டு விழாவினை முன்னிட்டு இந்துக் கல்லூரியில் மாபெரும் சிரமதானம்

Exams
0
மட்டக்களப்பு இந்துக் கல்லூரியானது எதிர்வரும் பெப்ரவரி மாதம் முதலாம் திகதி அன்று தனது 78ஆவது ஆண்டு விழாவினை கொண்டாடவுள்ளது.

 மேற்படி ஆண்டுவிழாவினை இம்முறை வெகு விமர்சையாகவும், ஆக்கபூர்வமான முறையிலும் கொண்டாடும் நோக்கில் பாடசாலையின் முகாமைத்துவ குழு, பழைய மாணவர் சங்கம், பாடசாலையின் அபிவிருத்தி சங்கம் என்பன இணைந்து பல்வேறு செயற்பாடுகளை முன்னெடுக்கவுள்ளன.

இதன்படி பழைய மாணவர் சங்கத்தின் ஏற்பாட்டில் எதிர்வரும் 28.01.2024 (ஞாயிறு) அன்று மாபெரும் சிரமதான நிகழ்வொன்று ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது.

 இந்நிகழ்வினை வெளிப்படுத்தும் வகையிலான விளம்பர பதாதைகள் இன்று (14) பாடசாலை அதிபர் திரு.கே.பகீரதன் அவர்களின் பிரசன்னத்துடன் பழைய மாணவர் சங்கத்தினரால் காட்சிப்படுத்தப்பட்டன.

1946 ஆண்டு பெப்ரவரி 01 ஆம் திகதி அப்போதைய அரசாங்க சபையின் பிரதிநிதியாக இருந்த அமரர் நல்லையா அவர்களினால் ஆரம்பிக்கப்பட்ட இப்பாடசாலையானது பவள விழாவினை கண்டு தற்போது பல்வேறு துறைகளில் மிளிர்ந்து வருகின்றது.

இந்நிலையில் இம்முறை 78 ஆவது ஆண்டு விழாவினை மேலும் சிறப்பிக்கும் வகையில் முதன் முறையாக "Hinduit Walk" நடைபவனியையும் நாடத்துவதற்கான ஒழுங்குகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.

Post a Comment

0Comments
Post a Comment (0)